வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (12:49 IST)

தமிழ் புத்தாண்டில் குவிந்த ரசிகர்கள்! – வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் வீட்டின் முன் குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சித்திரை முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. பிலவ ஆண்டு முடிந்து சுப கிருது ஆண்டு தொடங்கியுள்ளது.

தமிழ் புத்தாண்டான இன்று மக்கள் கோவில்களுக்கு சென்று வழிபட்டு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பொதுவாக இதுபோன்ற விழா நாட்களில் ரஜினி ரசிகர்கள் அவர் வீட்டின் முன்பாக திரண்டு வாழ்த்துகளை பெற்று வருவது வழக்கம்.

இன்றும் அதுபோல அவர்கள் குவிந்திருந்த நிலையில் நேரில் தோன்றிய ரஜினிகாந்த் அவர்களுக்கு தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.