வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 6 மார்ச் 2020 (18:24 IST)

காதல் தோல்வி.... விரக்தியால் சாமி சிலையை உடைத்த வாலிபர் !

காதல் தோல்வி.... விரக்தியால் சாமி சிலையை உடைத்த வாலிபர் !

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில், காதல் தோல்வி அடைந்த வாலிபர் ஒருவர், அங்குள்ள சாமி சிலையை உடைத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோவிலில், சாமி சிலை சேதப்படுத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளையடிக்க முயற்சி மேற்கொண்டதாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். 
 
அப்போது, கோயில் அருகே ஒரு செல்போன் கிடந்துள்ளது, அதைக் கைப்பற்றிய போலீஸார்,ரமேஷ் என்ற இளைஞரை காவலை நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 
 
அதில், தான் காதலித்த பெண்ணி உறவினர்கள்,  கோயில் கொடைவிழாவின் போது இடையில் தன்னை அடித்ததாகவும், அடித்தவர்களுக்கு தண்டனை வழக்க கோயிலில் வேண்டுதல் செய்ததாகவும் கூறினார். ஆனால் தன்னை தாக்கியர்களுக்கு அம்மன் தண்டனை வழங்காததால் நீ இங்கு என்ன பிரயோஜனம் என்றி நினைத்து கோயிலின் ஜன்னல் கம்பியால் சாமி சிலையை தாக்கியதாகவும் அதில் சிலை சேதமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.