1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu ration shop will be under new rules

பொருள் வாங்க குடும்ப தலைவர் அனுமதி கட்டாயம்! – அமைச்சர் அறிவிப்பு!

Tamilnadu
தமிழக ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க குடும்ப தலைவர் அனுமதி கடிதம் தேவை என்று உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழக ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதன்மீதான விவாத கூட்டம் இன்று முதல் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் இதில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி ரேசன் கடைகளில் ரேசன் பொருட்களை பதுக்குதல் மற்றும் ஏமாற்றுதலை தவிர்க்க குடும்பத்தில் இருக்கும் வேறு நபர்கள் நியாயவிலைக்கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் குடும்ப தலைவர் அனுமதி கடிதம் கட்டாயம் என்ற திட்டம் அமல்படுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.

குடும்பத்திலிருந்து 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் கை ரேகை வைத்து பொருட்களை பெற்று செல்லலாம் என அவர் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
மலேசியாவில் காபந்து அரசாக மொஹிதின் யாசின் தொடர மன்னர் உத்தரவு