1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu Rain chances today and more days

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Tamilnadu
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வரும் நிலையில் மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர். ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 16, 17, 18 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
தாலிபன்களின் உளவுத் திறன்கள்: சந்தேக நபர்களை கண்டறிவது எப்படி?