1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu rains chances today

தமிழகத்திற்கு காத்திருக்கு செம மழை! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் தமிழகத்தையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாக கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி  மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
ட்ரம்ப் கூட்டத்திற்கு போன 700 பேர் கொரானால் இறப்பு! – அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்!