வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2020 (09:10 IST)

லவ்வரும் இல்ல.. ஒன்னும் இல்ல! கல்யாணத்தை நிறுத்த பொய் சொன்னேன்! – இளம்பெண் விளக்கம்

சமீபத்தில் உதகமண்டலத்தில் இளம்பெண் தனக்கு நடக்க இருந்த திருமணத்தை கடைசி தருணத்தில் நிறுத்தியது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தான் திருமணத்தை நிறுத்தியது குறித்து அந்த பெண் விளக்கம் அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் மட்டகண்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கும் பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக மணமகன் வீட்டிலேயே திருமணம் நடத்தப்பட்ட நிலையில் தாலி கட்ட ஆனந்த வந்தபோது திடீரென மணமகள் பிரியதர்ஷினி ஒரு மணி நேரம் காத்திருக்குமாறும் தனது காதலன் தன்னை அழைத்து போக வந்து கொண்டிருப்பதாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

உறவினர்கள் பலர் வலியுறுத்தியும் அவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் அந்த பெண் பெற்றோரை விட்டு காதலனை தேடி சென்னை சென்று விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இந்த செய்தியை மறுத்துள்ள அந்த பெண் தான் தன் பெற்றோருடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு காதலர் யாரும் கிடையாது என்றும், மணமகன் மீது பல புகார்கள் உள்ளது தெரிய வந்ததால் திருமணத்தை நிறுத்த அவ்வாறு பொய் சொன்னதாகவும் விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.