வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2020 (08:34 IST)

முதல்வர் வேட்பாளராக கமல்; முதல்வராக்க என்ன ப்ளான்! – மநீம இன்று ஆலோசனை

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி ஆலோசனை கூட்டம் இன்று தொடங்குவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாநில அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலின் முதல்வர் வேட்பாளராக ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணி தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொள்ள இன்று சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. மூன்று நாட்கள் தொடரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தொகுதி வாரியான நிர்வாகிகள் மற்றும் அவர்களின் தேர்தல் திட்டங்கள் குறித்தும், கூட்டணி அமைப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.