1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (08:24 IST)

ப சிதம்பரம் கைது - தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து !

காங்கிரஸின் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான ப சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து தலைவர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டர். இந்த வழக்கில் சிதம்பரத்தைக் கைது செய்ய இருந்த தடையை நீக்கி முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து சிதம்பரம் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் பரவவே நேற்று அவரை சிபிஐ அதிகாரிகள் சுவரேறிக் குதித்து கைது செய்துள்ளனர்.இது குறித்து அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

ஸ்டாலின்
அரசியல் காழ்ப்புணர்வோடு இந்த கைது சம்பவம் நடந்துள்ளது. சிதம்பரம், ஒரு சட்ட வல்லுனர். அவர், இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வார்.

தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. வீட்டைப் பூட்டிக்கொண்டு திறக்காமல் இருந்ததால்தான் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்று அவரை கைது செய்யும் கட்டாயத்துக்கு ஆளாகினர். அதற்கு சிதம்பரமே முழுப்பொறுப்பாவார்.

திருமாவளவன்
சிதம்பரம் ஒன்றும் பயங்கரவாதி அல்லர். நாட்டின் நிதியமைச்சராக இருந்தவர். அவரைப் பழிவாங்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்.

ஜெயக்குமார், அதிமுக அமைச்சர்
நாடாளுமன்றத் தேர்தலின் போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்ததும் உடனடியாக, அதிமுகவில் உள்ள அனைவரையும் சிறைக்கு அனுப்புவோம் என சிதம்பரம் கூறினார். இன்று அவருக்கே, அந்த நிலை ஏற்பட்டிருப்பது, பரிதாபத்துக்குரிய விஷயம். அவர் தன்னைக் குற்றமற்றவர் என்பதை, நிரூபிக்க வேண்டும்.