புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 நவம்பர் 2021 (09:22 IST)

ஜெருசலேம் புனித பயணத்திற்கு ரூ.60 ஆயிரம் நிதியுதவி! – தமிழக அரசு அரசாணை!

ஜெருசலேம் புனித யாத்திரை செல்லும் கன்னியாஸ்திரீகளுக்கு உதவி தொகையை ரூ.60 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை செல்வது போல, கிறிஸ்தவர்களும் ஜெருசலேம் புனித யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் ஜெருசலேம் புனித யாத்திரை செல்லும் தமிழகத்தை சேர்ந்த அருட்சகோதரிகள் மற்றும் கன்னியாஸ்திரீகளுக்கு ரூ.37 ஆயிரம் நிதியுதவியாக வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது அந்த நிதியுதவி தொகை ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ளார்.