ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 8 டிசம்பர் 2020 (10:46 IST)

அரசு அறிவித்த விதிமுறைகள்… அதிருப்தியில் லாரி உரிமையாளர்கள் – காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு!

அரசு விதித்துள்ள விதிமுறைகளால் அதிருப்தியான லாரி உரிமையாளர்கள் டிசம்பர் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

சரக்கு லாரிகளில் வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் ஸ்டிக்கர்களை குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்கவேண்டும், உள்ளிட்ட சில புதிய விதிமுறைகளை தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்தது. ஆனால் அரசு சொல்லும் நிறுவனங்களில் ஸ்டிக்கர்களின் விலை  மற்ற நிறுவனங்களில் இருப்பதை விட பல மடங்கு அதிகமாக உள்ளதாக லாரி உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி டிசம்பர் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதனால் போக்குவரத்து தடை பட்டு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.