1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu hill side students meet network issues

சிக்னலே கிடைக்கல.. ஆன்லைன் வகுப்புக்காக மலை பயணம்!

Tamilnadu
ஆன்லைன் வகுப்புகளை படிக்க இணைய சேவை சிக்னல் கிடைக்காததால் மலையடிவார மாணவர்கள் மலைக்கு மேல் ஏற வேண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆன்லைன் வகுப்புகளை படிக்க செல்போன், இணைய வசதி இல்லாதது பல மாணவர்களுக்கு பின்னடைவாய் அமைந்துள்ள நிலையில், செல்போன், மடிக்கணினி இருந்து ஆன்லைன் வகுப்புகளை படிக்க முடியாத நிலையில் உள்ளனர் மலை அடிவார பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள்.

மலையடிவார பகுதிகளில் ஆன்லைன் வகுப்புகளை படிக்கும் அளவிற்கு இணைய சேவை கிடைக்காத காரணத்தால் தினமும் மலை மீது பல மணி நேரங்கள் ஏறி செல்ல வேண்டியதாக உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி பச்சைமலை மாணவர்கள் தினமும் பல மீட்டர் தூரம் மலையில் ஏறி சென்று ஆன்லைன் வகுப்புகளை படிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒரே ஒரு டவர் மட்டுமே இருப்பதால் அனைவருக்கும் இணைய வசதியும் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் 31 லட்சத்தை கடந்தது கொரோனா; குணமடைவோர் அதிகரிப்பு!