ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 27 மே 2023 (17:42 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வந்தாலும் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அந்த வகையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்களாவது.  திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி
 
ஆனால் அதே நேரத்தில் இன்று காலை முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல வெயில் அடித்தது என்றும் பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது 
 
காலையில் பெய்த வெயிலின் வெப்பத்திலிருந்து நீங்க 17 மாவட்டத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran