திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (12:00 IST)

தடுப்பூசி போட்டுக்கொள்ள அடம்பிடிக்கும் தமிழகம்! – இந்தியாவிலேயே கடைசி இடம்!

கொரோனாவிற்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் கடைசி இடத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில் அவசர கால தடுப்பூசிகளாக கோவிஷீல்டு மற்றும் கொவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை என தெரிய வந்துள்ளது.

கடந்த 2 நாட்களில் எதிர்பார்த்த எண்ணிக்கையில் வெறும் 22% பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும், இதனால் 292 டோஸ் மருந்து வீணாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவிலேயே மிகவும் குறைவாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள மாநிலமாக தமிழகம் கடைசி இடத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.