வாட்ஸ் ஆப்ல புகார் பண்ணுனா.. உங்க மேலதான் நடவடிக்கை! – கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை!

whatsapp
Prasanth Karthick| Last Modified திங்கள், 18 ஜனவரி 2021 (10:31 IST)
அரசு கல்லூரி பணியாளர்கள் கல்லூரி மற்றும் நிர்வாகம் தொடர்பான புகார்களை வாட்ஸ் ஆப்பில் தெரிவிப்பதற்கு கல்வி இயக்குனரகம் தடை விதித்துள்ளது.

தமிழக அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பணியாளர்கள் பலர் கொரோனா காரணமாக சமீப காலமாக தகவல் பரிமாற்றங்களை வாட்ஸப் குழுக்கள் வழியாகவே மேற்கொண்டு வந்துள்ளனர். முன்னதாக கல்லூரி வளாகம் மற்றும் நிர்வாகம் தொடர்பான புகார்களை முறைப்படி மேல் அதிகாரிகளிடம் அளித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சில பணியாளர்கள் வாட்ஸப் குழுக்களில் தங்கள் புகார்களை பதிவு செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து புதிய உத்தரவை வெளியிட்டுள்ள கல்லூரி கல்வி இயக்குனரகம் அரசு கல்லூரி பணியாளர்கள் தங்களது அலுவல் சார்ந்த குறைகளை முறைப்படி மேல் அதிகாரிகளிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்றும், அவற்றை வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்தால் சைபர் க்ரைம் குற்றம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :