தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை… அரசு வழக்கறிஞர் பதில்!

Last Updated: வியாழன், 22 ஏப்ரல் 2021 (18:09 IST)

தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் போதுமான அளவுக்கு ஆக்ஸிஜன் கையிருப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் கொரோனா மருந்துகள் தனிநபருக்கு விற்கப்படுவதாகவும், ஆக்ஸிஜன் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.

இதை சில ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டன. இந்நிலையில் இந்த வழக்கை தாமாக முன் வந்து ஏற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து இன்று பிற்பகலுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு தலைமை அரசு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையடுத்து பதிலளித்துள்ள அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன் ‘தமிழக அரசிடம் 31 ஆயிரம் ரெம்டெசிவர் குப்பிகள் உள்ளதாகவும், 4000 ரூபாய் மதிப்புள்ள குப்பிகளை 783 ரூபாய்க்கு அரசு கொடுப்பதாகவும் சொல்லியுள்ளார். மேலும் ஆக்ஸிஜன் மற்றும் வெண்டிலேட்டர் பற்றாக்குறை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :