ஆயுத பூஜை விடுமுறை; சொந்த ஊர் சென்ற 2 லட்சம் பேர்! – போக்குவரத்து துறை தகவல்!
தமிழகத்தில் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படும் நிலையில் விடுமுறைக்காக சென்னையிலிருந்து 2 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஆயுத பூஜை, விஜயதசமியை தொடர்ந்த வார இறுதி விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை உள்ளதால் சென்னையில் பணிபுரியும் பலர் நேற்று தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதற்காக அரசு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இந்நிலையில் ஆயுத பூஜை விடுமுறைக்காக சென்னையிலிருந்து அரசு பேருந்துகள் மூலம் 2,43,900 பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். இதற்காக சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 5,422 பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.