செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 நவம்பர் 2019 (08:42 IST)

மாற்று திறனாளிகளுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கும் தமிழக அரசு – அரசாணை வெளியீடு !

தமிழக தேர்தல்களில் இனி மாற்றுத் திறனாளிகளும் போட்டியிடலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தேர்தல் விதிகளின் படி, காது கேளாதவ்ர்கள், வாய் பேச முடியாதவர்கள், தொழு நோயாளிகள் உள்ளிட்ட சில  மாற்று திறனாளிகள் போட்டியிட முடியாத சூழல் நிலவி வந்தது.

இந்நிலையில் அதில் திருத்தம் கொண்டு வந்துள்ள தமிழக அரசு வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகளும் தேர்தலில் போட்டியிடலாம் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் இது வரும் உள்ளாட்சி தேர்தலில் இருந்தே அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் அதிகாரிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.