1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. VSK Demands two mayor seats from DMK

திமுகவிடம் விசிக பலே டிமாண்ட்: தலை அசைப்பாரா ஸ்டாலின்?

ஸ்டாலின்
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் இரண்டு மேயர் சீட் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த மூண்றாண்டுகளாக நடைபெறாமல் இருந்த தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. எனவே தமிழக அரசியல் கட்சிகள், அதன் கூட்டணி கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
 
இந்நிலையில், திமுக கட்சியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு மேயர் பதவிகளை கேட்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஆம், உள்ளாட்சி தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு இடங்களை ஒதுக்கலாம் என்று திமுக ஆலோசித்து வருகிறது. 
 
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவிடன் இரண்டு மேயர் பதவி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இது குறித்து திமுக முடிவு அதிகாரப்பூர்வ அறிவிப்பாக விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்
முதல்வருடன் காலால் செல்ஃபி எடுத்த ’தன்னம்பிக்கை’ இளைஞர் : கனிமொழி எம்.பி டுவீட் !