செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 12 நவம்பர் 2019 (17:15 IST)

9 + 5 வொர்க் அவுட் ஆகுமா? ஸ்டாலின் போட்ட கணக்கு தேறுமா? தேறாதா?

வரவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுக்கு எந்தனை மேயர் பதவிகளை கொடுப்பது என கணக்குப்போட்டு வைக்கப்பட்டுள்ளதாம். 
 
கடந்த மூண்றாண்டுகளாக நடைபெறாமல் இருந்த தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. எனவே தமிழக அரசியல் கட்சிகள், அதன் கூட்டணி கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
 
தற்போது தமிழகத்தில் 15 மாநகராட்சிகள் உள்ளன. இதனால் 15 மேயர் பதவி உள்ளது. இதில் திமுக 9 மேயர் பதவிகளை தனக்காக எடுத்துக்கொண்டு மீதமுள்ள 6 மேயர் பதவிகளை தனது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்கலாம் என கணக்குபோட்டுள்ளதாம். 
 
திமுகவிற்கான 9 மேயர் பதவி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், ஆவடி ஆகிய மாநகராட்சிகளின் மேயர் பதிவிகளாக இருக்ககூடும் என தெரிகிறது. ஆனால், இந்த கணக்குகளை கூட்டணி கட்சிகள் ஏற்குமா ஏற்காதா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.