புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (11:33 IST)

தமிழக அரசின் மாநிலக் கல்விக்கொள்கை! – பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு!

TN assembly
தமிழக அரசு விரைவில் கொண்டு வரவுள்ள மாநில கல்விக் கொள்கை குறித்து பொதும்மக்களிடமும் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை மாநிலங்களில் அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசு தனக்கென மாநில கல்விக்கொள்கை திட்டத்தை வகுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்த சிறப்புக்குழு மாணவர்களின் கற்றல் திறன், வருங்கால கற்றல் முறைகள் உள்ளிட்ட பல்வேறு கூறுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மாநில கல்விக் கொள்கையில் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் விதமான அம்சங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்து அனைத்து பகுதி மக்களிடமும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் மூலம் பொதுமக்கள் மட்டுமல்லாது ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பலரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது.

மேலும் மக்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மற்றும் தபால் மூலமாக அனுப்பலாம் என்றும், இமெயில் மற்றும் தபால் முகவரி விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.