செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (08:14 IST)

சில மணி நேரங்களில் 10 மாவட்டங்களில் மழை! – வானிலை ஆய்வு மையம்!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, இன்று இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, மயிலாடுதுறை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.