திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2022 (18:50 IST)

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரொனா தொற்று உறுதி!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று  தனது சமூக வலைதளத்தில்,தனது கொரொனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த கொரொனா தொற்று சில வாரங்களாக அதிகரித்து வரும், தினம் தோறும் கொரொனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும், கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று  தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார், அதில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
திமுகவினரும், மக்களும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரிவீட் செய்து வருகின்றனர்.