செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (11:15 IST)

தமிழக கவர்னர் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்: கொரோனா பரிசோதனையா?

தமிழகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சிலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழக கவர்னரின் ராஜ்பவன் மாளிகையில் பணி செய்து கொண்டிருந்த ஊழியர்களில் 3 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது
 
இதனை அடுத்தே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கவர்னர் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி மருத்துவ பரிசோதனைக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது