திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (09:54 IST)

முன்கூட்டியே நடத்தப்படுமா வாக்கு எண்ணிக்கை? – தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வாக்கு எண்ணிக்கையை விரைவில் தொடங்க கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துடன் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மறுபுறம் தேர்தல் பணிகளும் நடந்து வருகின்றன. தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிந்து விட்ட நிலையில் மே 2ம் தேதி வாக்கு எண்ணும் பணி தொடங்க உள்ளது. இந்நிலையில் இதற்கான ஆயத்த பணிகள், முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் அமைந்தால்தான் முக்கிய நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பதால் வாக்கு எண்ணிக்கை பணியை தாமதபடுத்தாமல் உடனே தொடங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளும் எழ தொடங்கியுள்ளன.