ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (09:12 IST)

குழந்தைகள் பத்திரம்... கொரோனா 2 ஆம் அலையில் சிக்கும் பரிதாபம்!

கொரோனா இரண்டாவது அலையில், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.  

 
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் 7,987 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9,62,935 ஆக உயர்ந்துள்ளது. 
 
இதில், கொரோனாவால் பாதிப்பு அடைந்த 7,987 பேர்களில் 2,558 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கொரோனா இரண்டாவது அலையில், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. ஆம், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 256 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
 
1 - 8  வயதுள்ள குழந்தைகள் கொரோனாவால் இந்தாண்டு அதிகம் பாதித்துள்ளதாகவும், இது கடந்தாண்டை விட பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளுக்கு பரவும் கொரோனாவால், பல்வேறு நோய் அறிகுறிகள் (  காய்ச்சல் , மூக்கடைப்பு , வயிற்றுப்போக்கு, தலைவலி )காட்டப்படுவதாகவும்  மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.