தமிழ்நாட்டில் பெண் வாக்காளர்கள் அதிகம்... வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் இருக்கும் வாக்களர்கள் பற்றிய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் நிறைவடைந்ததும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், அதில் பெண் வாக்காளர்கள் அதிகம் என்றும் பெண் வாக்காளர்கள் 3.10 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டனர். மேலும் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்துதல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட பணிகளும் இன்றே தொடங்கப்படவுள்ளது. 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்க விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு பின்னார் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
வாக்களர் பட்டியலில் சேர்ப்பு, திருத்தம், நீக்கம் ஆகியவைகளுக்கு நவம்பர் மாதத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடன் ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.