திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 27 அக்டோபர் 2023 (07:19 IST)

தமிழக பாஜகவினர் மீது தாக்குதல்: 4 பேர் கொண்ட மேலிட குழு இன்று வருகை

தமிழக பாஜகவினர் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் குறித்தும், தமிழக பாஜகவினர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்தும் ஆய்வு செய்வதற்காக  நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த குழு இன்று தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

பாஜகவின் சதானந்த கவுடா, சத்யபால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி. மோகன் குழு  இன்று தமிழ்நாடு வருகை தருகிறது. இந்த குழு சிறைகளில் இருக்கும் தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளது.

 சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் கொடி வைக்கப்பட்ட விவகாரத்தில் அமர் பிரசாத் ரெட்டி உட்பட ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்து இது குறித்து ஆய்வு செய்ய அனுப்பியுள்ளது.

இந்த குழு இன்று தமிழகம் வந்து ஆய்வு செய்து அறிக்கையை பாஜக தலைமைக்கு அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva