செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2020 (18:39 IST)

மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள்: ஜெட் வேகத்தில் உயரும் சென்னை

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் இன்று திடீரென தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1683 என்பதை சற்றுமுன் பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 54 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 27 பேர்கள் அதாவது 50% சென்னையில் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சென்னை மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது என்பதும் இதன்மூலம் தெரிய வருகிறது. இதனையடுத்து சென்னையில் மொத்த கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது.
 
சென்னையை அடுத்து இன்று சேலத்தில் 5 பேர்களும், நாமக்கல்லில் 4 பேர்களும், விருந்துநகர் மற்றும் திண்டுக்கல்லில் 3 பேர்களும், மதுரையில் இருவரும், அரியலூர், தர்மபுரி, ராமநாதபுரம்,தென்காசி, தஞ்சாவூர்,திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள்