புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2020 (18:29 IST)

தமிழகத்தில் இன்று 54 பேர்களுக்கு பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து ஒவ்வொரு நாளும் மாலையில் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்று முன்னர் தமிழக சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி இன்று மட்டும் தமிழகத்தில் 54 பேர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தோற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 54 பேர்களில் 24 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் இதனை அடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
அதேபோல் இன்று 90 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு குணமாகி உள்ளனர் என்பதும் தமிழகத்தில் இதுவரை 652 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் இரண்டு பேர் கொரோனாவால் பலியாகி உள்ளதால் தமிழகத்தின் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை, இன்று மட்டும் தமிழகத்தில் 6,954 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 65,977 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது