வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 மே 2020 (08:29 IST)

டிக்டாக் மூலம் 5 கோடி சம்பாதித்த கவர்ச்சி நடிகை… அதை வைத்து என்ன செய்தார் தெரியுமா?

பாலிவுட்டின் கவர்ச்சி கதாநாயகி ஊர்வசி ரவ்தொலா டிக்டாக்கில் நடன வகுப்புகள் சொல்லிக் கொடுத்து 5 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளார்.

பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவ்தொலா படவாய்ப்பு கிடைத்தாலே இயக்குனர் கேட்பதற்கு பத்து மடங்கு அதிகமாக திகட்ட திகட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தி படத்தை வேறலெவலில் ஹிட் அடிப்பார். அந்தவகையில் இவரது நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான சனம் ரே என்னும் படத்தில் இந்தி கவர்ச்சியின் உச்சத்தைத் தொட்டு இருந்தார்.

கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி-4, பகல் பந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவருக்கு சமூகவலைதளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில் கொரோனாவுக்கு நிதி திரட்ட முன்வந்த ஊர்வசி அதற்கு தனது நடனத் திறமையை பயன்படுத்த நினைத்தார். இணையத்தில் ஸூம்பா, லதின், டபாடா போன்ற நடனங்களை சொல்லி கொடுத்தார். அவரது இந்த நடன வீடியோக்கள் டிக்டாக் மூலம் அதிகம் பேரால் பார்க்கப்பட்டது. அந்த வீடியோக்கள் மூலம் அவருக்கு ரூ.5 கோடி கிடைத்துள்ளது. அந்த தொகையை அப்படியே அவர் கொரோனா நிவாரணத்துக்கு வழங்கி உள்ளார்.