திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 26 அக்டோபர் 2020 (15:10 IST)

சட்டசபை தேர்தலில் போட்டியில்லை… தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அதிரடி முடிவு!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தமிழக தலைவர் எல் முருகன் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக யாரும் எதிர்பார்க்காத விதமாக எல்  முருகன் சில மாதங்களுக்கு முன்னர் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் வெற்றிவேல் யாத்திரைக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி முன்னதாக காப்பு கட்டும் விழா பாஜக அலுவலகத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்ட எல் முருகன் தொண்டர்களுக்கு காப்பு கட்டி பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது வருகின்ற சட்டசபைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்தார்.