புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (15:07 IST)

குடியரசு துணைத் தலைவர் பதவியை எதிர்பார்க்கிறாரா தமிழிசை? பிரபலம் சொன்ன சீக்ரெட் தகவல்..!

tamilisai
தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழிசை சௌந்தரராஜன் கவர்னர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படும் நிலையில் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் பதவியை எதிர்நோக்கி தான் தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்திருப்பதாக கூறியுள்ளார்

கனிமொழியை எதிர்த்து கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் தமிழிசை சௌந்தரராஜன் என்றும், இந்தமுறை கனிமொழியை எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்க வைப்போம் என்று தெரிவித்துள்ளார்

மேலும் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததற்கு காரணம் அவர் தீவிர அரசியலில் போட்டியிடுவதற்காக என்று கூறப்பட்டாலும், அவர் குடியரசு துணைத் தலைவர் பதவியை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்

மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தமிழிசை செளந்திரராஜன் ஒருவேளை தோல்வியடைந்தால் அதன் பின் அவர் குடியரசு அவருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவி தருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அவருடைய இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva