வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 செப்டம்பர் 2018 (20:59 IST)

அதிமுகவை கூட உங்களால் அசைக்க முடியவில்லை: ஸ்டாலினை கலாய்த்த தமிழிசை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது திமுக தலைவர் கருணாநிதி மட்டும் நல்ல உடல்நிலையில் இருந்திருந்தால் தனது ராஜதந்திரத்தால் ஒரே வாரத்தில் அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியிருப்பார் என திமுகவில் ஒருசிலரே வெளிப்படையாக கூறி வந்தனர். ஆனால் மு.க.ஸ்டாலின் ஒன்றரை ஆண்டுகளாக இந்த ஆட்சியை நடக்கவிட்டு வேடிக்கை பார்த்து வருவது ஒருசில திமுகவினர்களுக்கே அதிருப்தியான செயல்தான்

அதுமட்டுமின்றி திமுகவுக்கு என ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உண்டு. அப்படியிருந்தும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் டெபாசிட் பறிபோனது ஸ்டாலின் தலைமை மீதான நம்பிக்கைக்கு கேள்விக்குறியாக இருந்தது.

இந்த நிலையில் மத்தியின் மீண்டும் காவி ஆட்சியை வரவிட மாட்டோம் என மு.க.ஸ்டாலின் சூளுரைத்து வருகிறார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியபோது, 'அதிமுகவையே அசைக்க முடியாத ஸ்டாலின், 23 மாநிலங்களில் ஆட்சி செய்யும் பாஜகவை அசைத்துவிடலாம் என்பது அவரின் பகல் கனவு என்று கூறியுள்ளார். மேலும் ப.சிதம்பரம் தேர்தல் அறிக்கை தயாரிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் தோல்வி உறுதியாகிவிட்டதாகவும் தமிழிசை சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.