செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (16:50 IST)

புஷ்கரமா? இல்லை புஷ் தான் காரணமா? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை கிண்டல் செய்த தமிழிசை

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தீர்ப்பு எப்படி இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் சுப்ரீம் கோர்ட் செல்வார்கள் என்பதால் இந்த தீர்ப்பால் தமிழக அரசுக்கு ஆபத்து இருக்காது என்றே கணிக்கப்படுகிறது.

இருப்பினும் ஒரு பாதுகாப்பிற்காக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் குற்றாலம் அருகில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கருத்து கூறிய தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்செல்வன், 'நாங்கள் எல்லோரும் புஷ்கர விழாவில் பங்கெடுத்து பாபநாசத்தில் குளிக்க வந்திருப்பதாகவும், இதனையடுத்து குற்றாலம் சென்று ஓய்வு எடுத்துவிட்டு இரண்டு நாட்களில் சென்னை திரும்புவோம் என்றும் கூறினார்.

இந்த நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் குற்றாலம் வருகை குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியபோது, 'தகுதி நீக்க எம்எல்ஏக்கள் 18 பேர் புஷ்கரம் விழாவுக்காக குற்றாலம் சென்றதாக சொல்கிறார்கள், புஷ்கரமா இல்ல வேறு புஷ் (push) தான் காரணமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்' என்று கிண்டலுடன் தெரிவித்துள்ளார்.