1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (14:11 IST)

உயிர்காக்கும் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை… தமிழிசை பதில்!

புதுச்சேரியில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகை ரெஜினா உள்ளிட்ட 30 பேர் சைக்கிள் பயணமாக சென்னையில் இருந்து பாண்டிச்சேரி சென்றனர். அவர்களை வரவேற்றார் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘புதுச்சேரியில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. அனைவருக்கும் மே 1 முதல் இலவசமாக தடுப்பூசி போடப்படும்’ எனக் கூறியுள்ளார்.