நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது
நெல்லையில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை வழக்கில் ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்ற ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கடந்த 18ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், கார்த்திக் மனைவி நிஷா, மற்றும் அக்பர் ஷா ஆகியோரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில், கார்த்திக், அகபர்ஷா சரணடைந்த நிலையில், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூர்த்தியை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அக்பர் ஷாவின் உறவினராக இருக்கும் 16 வயது பள்ளி மாணவன் இந்த கொலையில் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கபப்ட்டதால் அந்த சிறுவனும் கைது செய்யப்பட்டார். பிளஸ் ஒன் படிக்கும் அந்த சிறுவன், ஜாகிர் உசேன் பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு புறப்பட்டதும், கொலையாளிகளுக்கு செல்போனில் தகவல் வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, கைது செய்யப்பட்ட சிறுவன், சிறுவர் சீர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Mahendran