1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 ஏப்ரல் 2021 (13:44 IST)

இயக்குனர் அட்லி வீட்டில் நிகழ்ந்த மரணம்!

இயக்குனர் அட்லியின் பெரியப்பாவும் நீதிபதியுமான சவுந்தர பாண்டியன் இறந்துள்ளதை மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களில் அதிக சம்பளம் வாங்கும் ஒருவராக அட்லி இருந்து வருகிறார். இப்போது ஷாருக்கானை வைத்து அவர் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அட்லியின் பெரியப்பா , நீதிபதி சவுந்தரபாண்டியன் காலமாகியுள்ளார். இதை அட்லி தனது சமூகவலைதளத்தில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது துக்கத்தை பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.