செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 4 நவம்பர் 2022 (11:49 IST)

கவர்னரை திரும்ப பெற ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதால் எந்த பயனும் இல்லை: தமிழிசை

Tamilisai
தமிழக கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கையெழுத்து வேட்டை நடத்தி வருகின்றனர் என்பதும் இந்த கையெழுத்து மனுவை ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களிடம் அனுப்ப திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இது குறித்து புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியபோது கவர்னருக்கு அவரது கருத்தை கூற உரிமை உண்டு என்றும் அவரது கருத்து உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்றும் ஆனால் அவர் கூறிய ஒரு கருத்துக்காக அவரை திரும்ப பெறவேண்டும் என்று கூறுவது தவறு என்றும் கூறினார்
 
கருத்து சொல்ல உரிமை சாதாரண குடிமகனுக்கு உள்ளது போல் முதல் குடிமகனுக்கும் உள்ளது என்றும் அவரது கருத்திற்காக அவரை திரும்ப பெற வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினால் அதற்கு எந்தவித பயனும் இல்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்
 
Edited by Mahendran