வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 3 நவம்பர் 2022 (11:34 IST)

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ரஜினிகாந்த்- மம்தா- தமிழிசை: சந்திப்பு நடக்குமா?

mamtha tamilisai rajini
ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ரஜினிகாந்த்- மம்தா- தமிழிசை: சந்திப்பு நடக்குமா?
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகிய மூவரும் இன்று சென்னையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் நிலையில் மூவரும் சந்திப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மேற்கு வங்க கவர்னர் இல கணேசனின் சகோதரரின் 80வது பிறந்த நாள் விழா இன்று சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மேற்கு வங்க முதல்வர் சென்னை வந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது. மூன்று வெவ்வேறு துருவங்களான இவர்கள் மூவரும் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால் மூவரும் சந்தித்து பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு நிகழ்வு நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva