செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2019 (16:44 IST)

என்னது தாமரை கோலத்த அழிச்சுட்டீங்களா..? பொங்கி எழுந்த தமிழிசை!

தாமரை வடிவில் போடப்பட்ட கோலங்களை தேர்தல் அதிகாரிகள் அழித்ததால் கோபப்பட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பொதுமக்களால் வரையப்பட்ட கோலங்களில், தாமரை வடிவத்திலான கோலங்கள் இருந்த்தால் இது தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக அந்த கோலங்களை அழித்துள்ளனர். 
 
இதற்கு தமிழிசை கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பொதுமக்களால் வரையப்பட்ட தாமரை கோலத்தை அழித்த அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன். 
தாமைரையை பக்தி நோக்கத்தோடு பொதுமக்கள் வரைந்திருக்கின்றனர். இது தேர்தல் நோக்கத்தோடு வரையப்பட்டது அல்ல. அப்படி பார்த்தால், கை ஒரு கட்சியின் தேர்தல் சின்னம், அதற்காக கையை உடம்பிலிருந்து அகற்றி விடுவீர்களா? 
 
தினமும் சூரியன் உதிக்கின்றது. சூரியனும் ஒரு கட்சியின் தேர்தல் சின்னம். எனவே சூரியனை மறைத்து விடுவீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.