எல்லோர் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி கூறவில்லை - தமிழிசை பல்டி
கடந்த நாடாளுமன்ற தேர்தலிலின் போது, இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் எனக் கூறியிருந்தார்.
ஆனால், தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி பிரதமரானார். ஆனால், அவர் கூறியபடி கருப்புப் பணத்தை மீட்கவும் இல்லை. மக்கள் கணக்கில் இதுவரை பணம் செலுத்தவும் இல்லை.
இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்கள் மட்டுமில்லாமல், பல தேசிய அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வெளிநாட்டில் கறுப்பு பணம் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் போடும் அளவிற்கு பதுக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டு வருவோம் என்றுதான் மோடி கூறினர். இந்த உரையை திரித்துக்கூறி உங்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் போடுவதாக மோடி சொன்னாரே என பொய்ப்பிரச்சாரம் செய்யும் 2ஜி ஊழல் விஞ்ஞானிகள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, 2ஜி வழக்கில் சிக்கிய காங்கிரஸ் மற்றும் திமுகவினர்தான் இந்த பொய்ப்பிரச்சாரத்தை செய்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.