கருப்பு பணத்தை கணக்கு பார்க்க பத்து மாதங்களா? எதிர்க்கட்சிகள் கேள்வி
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்று கூறப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை படுதோல்வியில் முடிந்தது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பதில் மக்கள் திண்டாடியது ஒன்றுமட்டும் தான் மிச்சம். இந்த நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு பத்து மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் எவ்வளவு கருப்பு பணம் மீட்கப்பட்டது என்பதை கூற ரிசர்வ் வங்கி மறுத்து வருகிறது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: 'பண மதிப்பிழப்பிற்கு வங்கிகளுக்கு வந்து சேர்ந்த ரூ.15.28 லட்சம் கோடியில் கறுப்புப் பணம் எவ்வளவு என்பதை இப்போது சொல்ல இயலாது. காரணம் ஓரே நேரத்தில் அதிக அளவிலான பணங்கள் வங்கிகளில் குவிந்ததால், அதனை கணக்கு பண்ணி சரிபார்க்கும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. அதனால் எங்களுக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது' என்று கூறியுள்ளது.
ஆனால் எதிர்க்கட்சிகள் இதுகுறித்து கூறியபோது, 'இல்லாத கருப்புப்பணத்தை இன்னும் எத்தனை மாதங்கள் ரிசர்வ் வங்கி எண்ணுகிறது என்றும் கருப்பு பணம் அனைத்தும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓட்டையில் வெள்ளையாக மாறிவிட்டது என்றும் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் தங்களது தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன