திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 ஜூன் 2018 (10:19 IST)

அணுகுண்டா? புஸ்வானமா? பொறுத்திருந்து பார்ப்போம் - தமிழிசை பேட்டி

பெரிதும் எதிர்பர்க்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்று மதியம் 1 மணிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
திமுக, டிடிவி தினகரன் அணி தரப்பினர் இந்த தீர்ப்பை எதிர்பார்த்து ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். ஆனால், இந்த தீர்ப்பை அதிமுக தரப்பு சற்று பதட்டத்துடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில்,  அதிமுகவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்ப்பாக இது கருதப்படுகிறது.
 
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் “தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்கலாம். இல்லை புஸ்வானமாகவும் போகலாம். பொறுத்திருந்து பார்ப்போம்” என பேட்டியளித்துள்ளார்.