வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 ஜூன் 2018 (20:47 IST)

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: நாளை என்ன நடக்கும்?

தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த வழக்கின் விசாரணை முடிந்து நாளை தீர்ப்பு வெளியாகவுள்ளது. நாளை வெளிவரும் தீர்ப்பால் அரசு கவிழ்ந்துவிட வாய்ப்புள்ளது என்று ஒரு பிரிவினரும், அரசுக்கு ஆபத்து இல்லை என்று இன்னொரு பிரிவினர்களும் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் நாளைய தீர்ப்புக்கு பின்னர் என்ன நடக்கலாம் என்பதை பார்ப்போம். 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் வரும். இந்த தேர்தல் முடிவை பொறுத்தே ஆட்சி நீடிப்பதும் கவிழ்வதிலும் இருக்கும்
 
அதேபோல் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தால் அந்த எம்.எல்.ஏக்கள் தனி அணியாக செயல்படவும், திமுகவுடன் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முயலவும் செய்யலாம்.
 
இந்த இரண்டு இல்லாமல் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட மறு அமர்வுக்கு செல்லும். அந்த தீர்ப்பு வரும் வரை இதே ஆட்சி தொடரும்
 
இந்த மூன்றில் நாளை என்ன நடக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்