புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (12:07 IST)

திருமங்கலம் கண்ட ஊழல் ஃபார்முலா???- கனிமொழியை கலாய்த்த தமிழிசை

சமீபகாலமாக தூத்துகுடி எம்.பி கனிமொழிக்கும், தமிழிசை சௌந்தர்ராஜனுக்கும் இடையேயான வாக்குவாதம் வலுத்து வருகிறது.

வேலூர் தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை “அதிர்ஷ்டவசத்தால் கிடைத்த வெற்றி” என்பது போலான தோனியில் தமிழிசை கருத்து தெரிவித்தார். அதற்கு பதிலடியாக “ஏதாவது ஒரு தொகுதியிலாவது முதலில் வெற்றிபெற்றுவிட்டு, பிறகு திமுகவின் வெற்றியை விமர்சனம் செய்யுங்கள்” என்று கூறினார் கனிமொழி.

இந்நிலையில் கனிமொழிக்கு பதிலடி தரும் விதமாக “ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நிறுத்த திமுக திருமங்கலம் ஃபார்முலா கண்ட ஊழல் வாரிசுகள் தயாரா?” என கேள்வியெழுப்பி உள்ளார் தமிழிசை.

தூத்துக்குடியில் மக்களவை தேர்தலில் கனிமொழியும், தமிழிசை சௌந்தர்ராஜனும் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிட்டனர். அப்போதிலிருந்தே இருவருக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.