வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2019 (17:30 IST)

ஒரு உத்தரவால் தமிழகத்திலும் ஹீரோ ஆன ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் புதிதாக ஆட்சியமைத்த ஜெகன் மோகன் ரெட்டி தமிழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டிருப்பது தமிழக மக்களுக்கு ஜெகன் மோகன் மீது மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.

பாலாறு குறுக்கே அணை கட்டும் விவகாரம் தொடர்பாகவும், கிருஷ்ணா நதிநீர் திறந்துவிட கோரியும் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திராவுக்கே சென்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் வலியிறுத்தினர்.

அதை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு 8 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். இந்த அளவானது கர்நாடகா காவிரிக்கு ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய தண்ணீரின் அளவான 9 டி.எம்.சிக்கு ஒரு டி.எம்.சி அளவு குறைவானதாகும்.

ஆந்திராவில் புரட்சிகரமான பல முடிவுகளை எடுத்து மக்களை கவர்ந்த ஜெகன் மோகன் இந்த முறை தனது முடிவால் தமிழக மக்களின் மதிப்பையும் பெற்றுள்ளார். இந்த உடனடி முடிவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.