செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் மோடி படத்தை ஒட்டிய பாஜக நிர்வாகி!
செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் மோடி படத்தை ஒட்டிய பாஜக நிர்வாகி!
தமிழகத்தில் நாளை முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்னை வரவுள்ளார் என்பதும் தொடக்கவிழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த போஸ்டரில் தமிழக முதல்வரின் புகைப்படம் மட்டுமே உள்ளது என்றும் பிரதமர் புகைப்படம் இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.
இதனை அடுத்து செஸ் ஒலிம்பியாட் போஸ்டரில் பாஜக நிர்வாகிகள் மோடியின் படத்தை ஒட்டி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது