1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 21 மே 2020 (17:09 IST)

என்னை எப்படியாவது அம்மாவிடம் சேர்த்துவிடுங்கள்: துபாயில் புற்றுநோயால் அவதிப்படும் இளைஞரின் வீடியோ

என்னை எப்படியாவது அம்மாவிடம் சேர்த்துவிடுங்கள்
துபாய் நாட்டிற்கு வேலை தேடி சென்ற போடிநாயக்கனூர் இளைஞர் ஒருவர், அங்கு வேலை கிடைக்காமல்  மிகவும் கஷ்டப்படுவதாகவும் அதுமட்டுமின்றி மஞ்சள் காமாலை மற்றும் புற்றுநோயால் நோயால் அவதிப்படுவதாகவும் இதனை அடுத்து தன்னை எப்படியாவது சொந்த ஊர் கொண்டு போய் சேர்த்து விடுங்கள் என்று அவர் வீடியோ ஒன்றில் கண்ணீருடன் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் கடந்த ஜனவரி மாதம் துபாய்க்கு வேலை தேடி சென்றார். ஆனால் அவருக்கு அங்கு வேலை கிடைக்காததால் நண்பர்களின் அறையில் தங்கி வேலை தேடி வந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அவருடைய அன்பர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்பி விட்டனர். அவரால் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது 
 
மேலும் மஞ்சள் காமாலை மற்றும் புற்று நோயால் அவதிப்படுவதால் கடந்த சில நாட்களாக அவர் சாப்பிடவில்லை என்றும் தெரிகிறது. இதனையடுத்து வீடியோ ஒன்றில் தன்னை எப்படியாவது தன்னுடைய சொந்த ஊரில் சென்று சேர்த்துவிடுங்கள் என்றும், அங்கே இருக்கும் தன்னுடைய அம்மா தன்னை குணப்படுத்திவிடுவார் என்றும், என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்
 
மேல்லும் தன்னுடைய நோய் குறித்தும் தன்னுடைய நிலை குறித்தும் துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் தெரிவித்ததாகவும் ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கணேஷ் போடியை சேர்ந்தவர் என்பதால் போடி எம்எல்ஏ மற்றும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் இதுகுறித்து அதிரடி நடவடிக்கை எடுத்து கணேஷை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது