1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil student prabanjan first place in neet

நீட் தேர்வில் இந்திய அளவில் தமிழக மாணவர் முதலிடம்.. நீட் எதிர்ப்பு இனி எடுபடுமா?

நீட் தேர்வு
நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இந்திய அளவில் தமிழக மாணவர் பிரபஞ்சன் என்பவர் முதல் இடத்தை பெற்றுள்ளார். 
 
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ கல்லூரி படிப்புக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் நீட் தேர்வு எதிர்ப்பு என்ற கோஷம் எழுந்து வருகிறது. 
 
ஆனால் தமிழக மாணவர் இந்தியாவிலேயே நீட் தேர்வில் முதலிடத்தைப் பெற்று தங்களால் நீட் தேர்வில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார். பிரபஞ்சன் மட்டுமின்றி முதல் 10 இடங்களில் நான்கு தமிழக மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முதலிடம் பெற்ற மாணவர் பிரபஞ்சன் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்ய நீட் தேர்வு அவசியம் என்று கூறியுள்ளார். தமிழக அரசியல்வாதிகள் நீட் தேர்வை வேண்டாம் என்று கூறிவரும் நிலையில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை செய்து வருவதால் நீட் தேர்வு எதிர்ப்பு இனி எடுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
லட்சக்கணக்கில் கொடுத்து படித்ததால் நீட் தேர்ச்சி! – நீட்டை மறுக்கும் ராமதாஸ்!