திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 11 ஜூன் 2023 (10:10 IST)

நீட் தேர்வு எழுதிய மாணவர் திடீரென மாயம்: கரூரில் பரபரப்பு..

நீட் தேர்வு எழுதிய மாணவர் திடீரென மாயமாகிவிட்டதை அடுத்து கரூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த மாதம் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதியவர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் கரூர் பகுதியை சேர்ந்த பாரதி என்ற 19 வயது மாணவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி கடந்த மாதம் நடந்த நீட் தேர்வை எழுதினார். 
 
இந்த நிலையில் நீட் தேர்வில் குறையான மதிப்பெண் கிடைக்கக்கூடும் என்று பாரதி கடந்த சில நாட்களாக கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென அவர் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் மாயமாகிவிட்டதாகவும் தெரிகிறது. 
 
பாரதியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை என்பதை அடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மாயமான பாரதியை தேடி வருகின்றனர்
 
Edited by Siva